‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் எப்படி இருக்கும்? இதுதான் கதையா?

இயக்குநர் ராஜேஷ் எம் மற்றும் ஜீவா கூட்டணியில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த கூட்டணி 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’. இப்படத்தில் இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் இப்படத்தை தயாரித்து வருகிறார். காமெடி ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில், ‘சிவா மனசுல சக்தி’யில் சந்தானம் வகித்த காமெடி இடத்தை, இந்த முறை யூடியூப் பிரபலமான ‘பரிதாபங்கள்’ கோபி நிரப்பியுள்ளார்.

தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் குறித்து இயக்குநர் ராஜேஷ் எம் கூறுகையில், இது தனது பாணியிலான முழுநீள காமெடி திரைப்படம் என்றும், ஒவ்வொருவரின் ஜாலியான வாழ்க்கை காலத்தையும் அதன் பின்னர் வரும் மாற்றங்களையும் நகைச்சுவையாக சொல்லும் படம் என்றும் தெரிவித்தார். மேலும், ஜீவா இன்றும் அதே உற்சாகத்துடன் இருப்பதாகவும், அவரது எளிமையே படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading