யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் நடிகை ருக்மணி வசந்த், இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘டிராகன்’ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தொடர்ச்சியான படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருந்தாலும், தனது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் நேரம் ஒதுக்கி வருகிறார் ருக்மணி வசந்த். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில், தனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அதில், சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்ற மின் ஜின் லீ எழுதிய ‘பச்சிங்கோ’ வரலாற்று நாவலை தற்போது வாசித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது தினசரி உணவில் இட்லி, பாஸ்தா, ரொட்டி போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவதாகவும் கூறியுள்ளார்.அதேபோல், செர்ரி, பெர்ரி, கிவி, டிராகன் புரூட் போன்ற பழங்களுடன் ஐஸ்கிரீம் மற்றும் பிளாக் காபியையும் ரசிப்பதாக தெரிவித்துள்ள அவர், உணவுப் பழக்கத்துடன் உடற்தகுதியிலும் கவனம் செலுத்தி வருவதாக கூறி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
—
