AA23 டைட்டில் டீசர் தயாராகிவிட்டதா? ரசிகர்களுக்கு மாஸ் சர்ப்ரைஸ் வைத்துள்ள லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள AA23 திரைப்படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, படத்தின் டைட்டில் டீசருக்கான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம், லியோ, கூலி உள்ளிட்ட படங்களுக்கு மாஸான அறிவிப்பு வீடியோக்களை வெளியிட்ட லோகேஷ், AA23-க்கும் அதேபோல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் டீசரை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தீம் வீடியோ ஏற்கனவே இந்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU)-இல் இணையுமா என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அல்லு அர்ஜூன் தற்போது அட்லி இயக்கும் ‘ராக்கா’ படத்தில் பிஸியாக இருப்பதால், அந்தப் படப்பிடிப்பு முடிந்த பிறகு, 2027 பொங்கலுக்கு பின்னர் AA23 படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading