சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது தயாரிப்பான ‘மகுடம்’ திரைப்படத்தை நடிகர் விஷால் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ஜூலை 16-ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதால், ரசிகர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மிகப்பெரிய அளவில் நடத்த தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
