சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைந்த ராஜ் பி.ஷெட்டி… எகிறும் எதிர்பார்ப்பு!

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமையால் கவனம் ஈர்த்துள்ள ராஜ் பி.ஷெட்டி, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

கடந்த ஆண்டு அவர் தயாரித்த ‘சூ பரம் சோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

ராஜ் பி.ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, “நடிகர்களின் கூட்டணியில் பலம் சேர்கிறது… கொண்டாட்டம் பெரிதாகிறது” என்ற வாசகத்துடன் அவரது கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்க, ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading