‘காஞ்சனா 4’ படத்தில் நயன்தாரா… முக்கிய ஃபிளாஷ்பேக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா?

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா’ திரைப்பட வரிசை ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘காஞ்சனா 4’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தையும் ராகவா லாரன்ஸே இயக்கி, கதாநாயகனாக நடித்துவருகிறார். அவருடன் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா பதேஹி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது சென்னை டி.ஆர். கார்டனில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் முக்கியமான ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அவர் நடிப்பதாகவும், அவரது கதாபாத்திரமே கதையின் திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ‘காஞ்சனா’ திரைப்பட வரிசையின் இறுதிப் பாகமாக இந்தப் படம் இருக்கும் என்ற தகவலும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading