‘கீதா கோவிந்தம்’, ‘சர்காரு வாரி பட்டா’, ‘பேமிலி ஸ்டார்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய பரசுராம் பெட்லா, அடுத்ததாக பாலிவுட் நட்சத்திரம் ஹிர்த்திக் ரோஷனை வைத்து புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பேமிலி ஸ்டார்’ படத்திற்குப் பிறகு அவரது அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த தகவல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே ஹிர்த்திக் ரோஷனை வைத்து மூன்று படங்களை தயாரிக்க உள்ளதாக கடந்த ஆண்டு ஹோம்பாலே நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வரிசையில் உருவாகும் முக்கிய படங்களில் ஒன்றாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
—
