இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களை இயக்க தயாராகி வரும் நிலையில், தயாரிப்பாளராகவும் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார்.
ஜி ஸ்குவாட் நிறுவனம் மூலம் ‘பென்ஸ்’, ’29’, ‘பைட் க்ளப்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள அவர், தற்போது மேலும் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறார்.
‘பாம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். இதில் நடிகை ரெஜினா கசாண்டரா கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான ‘மாநகரம்’ திரைப்படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
