தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா, தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான சிஸ்டம் வெப் தொடரில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அஸ்வினி அய்யர் திவாரி இயக்கிய சிஸ்டம் வெப் தொடரில், பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுடன் இணைந்து நடித்த ஜோதிகாவின் இயல்பான நடிப்பு ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்தது. விருது பெற்றதையடுத்து பேசிய ஜோதிகா, “மொழி எல்லைகளைத் தாண்டி புதிய கதைகளிலும், கதையை முன்னோக்கி நகர்த்தும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த தேடலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
