தெலுங்கில் அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ‘மா இன்ட்டி பங்காரம்’ படம் 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. தற்போதைய சூழலில் 40 கோடிக்கும் மேல் ஷேர், 30 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளதாம். தெலுங்கில் கதாநாயகிகள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த படங்களில் வேறு எந்த ஒரு நடிகையும் பெறாத வசூலை சமந்தா பெற்றுள்ளார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தில் தெலுங்கில் சில முன்னணி நடிகர்களின் படங்களே தடுமாறிய நிலையில் சமந்தாவின் இந்த சாதனை மற்ற கதாநாயகிகளுக்கும் சந்தோஷத்தைத் தந்துள்ளது.
Add a Comment
