நடிகர் அரவிந்த் ஆகாஷூக்கு திருமணம்!

சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அரவிந்த் ஆகாஷ். தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம், கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார். பெரும்பாலும் வெங்கட் பிரபுவின் படங்களில் தலை காட்டி விடுவார். தற்போது இவர் திருமண பந்தத்தில் இணைகிறார். நாளை (ஜூலை 3ம் தேதி) மலேசியாவில் இவருக்கும், சாரா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடக்கிறது. முன்னதாக நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, விஜய் வசந்த், வைபவ், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் உள்ளிட்டவர்களும், சென்னை 28 படத்தில் நடித்தவர்களும் பங்கேற்றனர். நிச்சயதார்த்தம் தொடர்பான போட்டோக்கள் வலைதளத்தில் வைரலாகின.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading