ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ படம் ஜப்பானில் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ரன்வீர் சிங் ஜப்பான் ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “ஜப்பானில் உள்ள அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். ‘துரந்தர் 2’ திரைப்படம் ஜூலை 10-ஆம் தேதி ஜப்பானில் வெளியாகிறது. அதீத எமோஷன், ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான கதைகளத்தைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவத்தை இப்படம் உங்களுக்கு வழங்கும். இந்தியாவின் மிகச்சிறந்த, மிகப்பெரிய இந்தத் திரைப்படத்தை பெரிய திரையில் பார்த்து ரசிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Add a Comment
