50வது நாளை வெற்றிகரமாகக் கடந்த ‘கருப்பு’ !

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் மே 15ல் வெளிவந்த திரைப்படம் ‘கருப்பு’. எதிர்பார்த்ததை விடவும் வசூலைப் பெற்ற இந்தப் படம் சூர்யாவின் திரையுலக வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்றது. உலக அளவில் 350 கோடி வசூலையும், தமிழக அளவில் 190 கோடி வசூலையும் இந்தப் படம் கடந்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுன் மாதம் 12ம் தேதியே இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இருந்தாலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சில ஊர்களில் சில தியேட்டர்களில் தொடர்ந்து ஓடி வருகிறது. தற்போது இப்படம் 50வது நாளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading