ஓடிடியில் வெளியான நஸ்லனின் “மோலிவுட் டைம்ஸ்”!

பிரேமலு திரைப்படம் மூலம் பெருமளவில் கவனமும், மொழிகளைக் கடந்த ரசிகர்களையும் பெற்றவர் நடிகர் நஸ்லன். அவர் நடித்து வெளியான “ஆலப்புழா ஜிம்கானா” படமும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அபினவ் சுந்தர் இயக்கத்தில் நஸ்லன் நாயகனாக நடித்து வெளியான புதிய படம் “மாலிவுட் டைம்ஸ்”. சினிமா மீது ஆர்வம் கொண்ட இளைஞனின் ஹாரர் படம் எடுக்கும் முயற்சியைக் கதைகளமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான வினீத் ஸ்ரீனிவாசன், ஷராஃபூதீன், சங்கீத் பிரதாப், பசில் ஜோசப், ரோஷன் ஷாநவாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், திரையரங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற “மோலிவுட் டைம்ஸ்” படம் இன்று (ஜூலை 3) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading