நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுக்கும் கும்பலாங்கி நைட்ஸ் இயக்குனர்!

மலையாளத்தில் கடந்த 2019ல் வெளியான படம் கும்பலாங்கி நைட்ஸ். நடிகர் பஹத் பாசில் இதில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்தனர். நடிகை அன்னா பென் கதாநாயகியாக இதில் தான் அறிமுகமானார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தை இயக்குநர் மது சி. நாராயணன் இயக்கி இருந்தார். ஆனாலும் கடந்த ஏழு வருடங்களாக இவர் தனது அடுத்த படத்தை தொடங்கவே இல்லை. இந்த நிலையில், அடுத்ததாக இவர் இசையை மையப்படுத்தி புதிய படத்தை இயக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.. இதில் பிரேமலு புகழ் நடிகர் நஸ்லேன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ரெக்ஸ் விஜயன் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading