இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அவர்கள் மறைந்த இயக்குனர் பாக்யராஜ் அவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், திரைக்கதை மன்னன் என்று மொத்த இந்தியப் படவுலகமும் கொண்டாடிய ஒரே கதாசிரியர் பாக்யராஜ். பல தொடர் வெற்றிகளை பெற்ற போதிலும் அந்தப் புகழ் போதையால் பாதிக்கப்படாமல் எல்லோராலும் எந்த நேரத்திலும் அணுகக்கூடிய ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்தவர் அவர். அவரது முதல் படமான 16 வயதினிலே படத்திலிருந்து அவரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பினை நான் பெற்றேன்.
50 ஆண்டுகாலம் என்னோடு நட்பில் இருந்த பாக்யராஜ் இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்தப் பெரும் துயரிலிருந்து அவருடைய குடும்பத்தினர் மீண்டு வரக்கூடிய சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என உருக்கமாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
