‘அரசன்’ படத்தில் முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துவரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படம், வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர், விக்ராந்த், யோகலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘அரசன்’ திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், சிறிய ஓய்வுக்குப் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading