மாலிக் ராம் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை இணையத் தொடர் ‘சூப்பர் சுப்பு’. கிராமப்புற பின்னணியில் வாழும் சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் என்ற அப்பாவியான இளைஞருக்கு, எதிர்பாராத விதமாக பாலியல் கல்வி ஆசிரியராக வேலை கிடைக்கிறது.
பழமைவாத எண்ணங்கள் கொண்ட கிராம மக்களிடையே அவர் எதிர்கொள்ளும் நகைச்சுவை கலந்த சவால்களே இந்த தொடரின் மையக் கதையாக அமைந்துள்ளது. சந்தீப் கிஷனுடன் மிதிலா பல்கர், முரளி சர்மா, கெட்அப் சீனு மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த இணையத் தொடர் ஜூலை 2ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இதன் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர், தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
