பத்ம பூஷண் விருது பெற்றதை தனுஷின் ‘ஓம்’ படக்குழுவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய மம்முட்டி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘கர’ திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், வெளியான பின்னர் கலவையான விமர்சனங்களை பெற்றது.

‘கர’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த திரைப்படம், இதுவரை ‘தனுஷ் 55’ என்ற தற்காலிக பெயரில் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக, சாய் பல்லவி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் தலைப்பை சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ‘தனுஷ் 55’ திரைப்படத்திற்கு ‘ஓம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ‘ஓம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. தலைப்பு அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தில் அவரது தோற்றத்திற்கான சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Add a Comment

Leave a Reply