நடிகர் ராம் சரணின் அடுத்த படத்தை இயக்குநர் சுகுமார் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில் ராம் சரணின் தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி கலந்துகொண்டார்.
தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து ராம் சரணும் சுகுமாரும் மீண்டும் இணைவதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘புஷ்பா’, ‘புஷ்பா 2’ எனத் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த சுகுமார் இயக்குவதால், இப்படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகர் ரிஷிகாந்த் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘மொத ராத்திரி’, ‘டோரதி’ ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்ற ரிஷிகாந்த், தெலுங்கில் வில்லனாக அறிமுகமாகவுள்ளதாகக் கூறப்படும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
