கதாநாயகனாக நடிக்கும் இயக்குனர் ஷங்கரின் மகன்… கதாநாயகியாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி!

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது அவரது மகன் அர்ஜித் ஹீரோவாக சினிமாவில் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகராக அறிமுகமாகும் முன்பு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் அர்ஜித்துக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மதராஸி’ திரைப்படத்திலும் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் குமார் இயக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தின் மூலம் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். இளம் தலைமுறையை கவரும் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் பூஜை விழா நேற்று நடைபெற்றது.

இந்த பூஜை விழாவில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading