‘அன்பே டயானா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய பாரி இளவழகன், தற்போது ‘அன்பே டயானா’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்து கவனம் பெற்ற மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது திரைப்படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளதால், படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த திரைப்படத்தில், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா மீண்டும் திரையுலகில் நடிப்பதற்காக களமிறங்கியிருப்பதும் இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரோஜாவை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தில் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், சென்னை பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். அதன்பின்னர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ‘அன்பே டயானா’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் வருகிற ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading