‘செம்பருத்தி’ தொலைக்காட்சி தொடரில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் ஷபானா ஷாஜஹான். அந்த தொடரின் மூலமாகவே தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான அவர், பின்னர் ‘மிஸ்டர் மனைவி’ தொடரிலும் நடித்தார். அதுமட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகளைத் தேடி வந்த ஷபானா, சமீபத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, ‘மேரேஜ் ஸ்டோரி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். ரீல் பெட்டி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் சுனில் தேவ் இயக்கியுள்ளார். இதில் எஸ்.பி. சித்தார்த் மற்றும் தீபிகா வெங்கடாச்சலம் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ், புதுவை பூபாலன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நட்பு, காதல் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் இணைந்த கமர்ஷியல் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், தீபன் சக்ரவர்த்தி இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
—
