இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டிருந்த பிறந்தநாள் வாழ்த்து பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பதிவில், “நான் அறிந்த மனிதர்களில் மிகவும் உண்மையானவர்களில் ஒருவரான உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று அவர் அன்புடன் குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், “என்னுடைய இரண்டு திரைப்படங்களுக்காக நீங்கள் உருவாக்கியுள்ள இசையின் மாயாஜாலத்தை இந்த உலகம் எப்போது பார்க்கப் போகிறது என்பதை அறிய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எப்போதும் உங்கள்மீது எனது அன்பு இருக்கும் சகோதரா” என்றும் துல்கர் சல்மான் தனது பதிவில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஜி.வி. பிரகாஷ், “லவ் யூ ப்ரோ” என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். தற்போது துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்து வரும் இரண்டு திரைப்படங்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
