ஹிருது ஹாருணின் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பேமிலி படம்’ திரைப்படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன் அடுத்ததாக இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘டெக்ஸாஸ் டைகர்’. இந்தப் படத்தில் ஹிருது ஹாருண் கதாநாயகனாக நடித்துள்ளார். யுகே ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் சுஜித், பாலாஜிகுமார், பாரதிகுமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி, சாச்சனா, வாபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், அந்தோணி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக வெளியான ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாக பரவியது.சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இசையை மையமாகக் கொண்ட இளமை ததும்பும் வண்ணமயமான படைப்பாக இந்த திரைப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனமான சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading