தயாராகிறது ‘ரேனிகுண்டா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘ரேனிகுண்டா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியது. ஜானி, சஞ்சனா சிங், தீப்பெட்டி கணேசன் மற்றும் சனுஷா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார்.

‘ரேனிகுண்டா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சனுஷா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த அவர், 2000ஆம் ஆண்டு வெளியான ‘தாதா சகேப்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்த அவர், நடிகர் விக்ரம் நடித்த ‘காசி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘பீமா’, ‘நாளை நமதே’, ‘எத்தன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ மற்றும் ‘கொடி வீரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.

கடைசியாக இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் புதிய ‘ரேனிகுண்டா’ திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மனு ரவிச்சந்திரன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் பாடல்களை யுகபாரதி மற்றும் விவேகா எழுதி வருகின்றனர். மேலும், இளம் நடிகை தீப்ஷிகா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading