நூறு கோடி பேர் கண்டுகளித்த ‘கருப்பு’ திரைப்படம்!

ஆர்.ஜே .பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கருப்பு. கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று இதுவரை 310 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 160 கோடி வசூலித்து இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் இந்த கருப்பு படத்தை ஒரு கோடி பேர் பார்த்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. அந்த வகையில் சூர்யா நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாட்டில் அதிகப்படியாக ரசிகர்கள் பார்த்த படமாக கருப்பு புதிய சாதனை செய்திருக்கிறது. குறிப்பாக, இந்த படம் விஜய் நடித்து வெளியான பிகில், வாரிசு படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading