சமீபத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ‘பவழமல்லி’ என்ற இன்டீ பாடலை வெளியிட்டார். இந்த பாடலை விவேக் எழுத, சுருதி ஹாசன் பாடியுள்ளார். சாய் அபயங்கர் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலில் நடிகை கயாடு லோஹர் உடன் சாய் அபயங்கர் இணைந்து நடனமாடியிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்காணோர் ரீல்ஸ் செய்து வெளியிட்டனர். இந்த நிலையில், ‘பவழமல்லி’ பாடல் வெளியான 91 நாள்களில் 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
Add a Comment
