தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது மகள் ஜான்வி கபூர் நடித்த தெலுங்குப் படமான ‘பெத்தி’ இன்று வெளியாகி உள்ளது. அதை முன்னிட்டு இன்று திருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஹிந்திப் படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், 2024ல் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக ‘தேவரா’ படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அவர் நடித்துள்ள இரண்டாவது தெலுங்குப் படம்தான் ‘பெத்தி’. இப்படத்தில் அச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
