மும்பையில் மிகப்பெரிய தொகையில் நிலம் வாங்கிய நடிகர் யாஷ்!

கன்னடத் திரையுலகத்தின் இளம் நடிகரான யஷ், ‘கேஜிஎப்’ படம் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். தற்போது ‘டாக்சிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தியில் தயாராகும் ‘ராமாயணா’ படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தொடர்ந்து ஹிந்திப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதனால், மும்பை அருகே அலிபாக் என்ற கடலோரப் பகுதியில் சுமார் 25 கோடி கொடுத்து நிலத்தை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சில ஹிந்தி சினிமா பிரபலங்கள் அப்பகுதியில் பார்ம் ஹவுஸ் வைத்துள்ளார்களாம். அலிபாக் தாலுகாவில் கமத் என்ற கிராமத்தில் கிஹிம் பீச் பகுதியில், சுமார் 5200 சதுர மீட்டர் அளவு கொண்ட அந்த நிலத்தில் வீடு ஒன்றும் இருக்கிறதாம். நிலத்தின் கிழக்குப் பகுதியில் கிராமத்து சாலையும், மேற்குப் பகுதியில் கடலும் இருப்பதால் அதன் மதிப்பு அதிகம் என்கிறார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading