கென் கருணாஸ் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகி பாராட்டுகளை குவித்தது. இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘முட்ட கலக்கி’ பாடல் இணையத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த பாடல் யூடியூபில் 20 கோடி பார்வைகளை (200 மில்லியன்) கடந்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது.
Add a Comment
