முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அரசியல் பயணத்தில் முக்கியமான சாதனையை படைத்துள்ளார். கட்சி தொடங்கிய பிறகு சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த சந்திப்புகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், “நமது மாண்புமிகு முதலமைச்சரை சந்தித்து, அவருடன் மிகவும் அருமையான நேரத்தை செலவிட்டேன். எப்போதும் போலவே அவரது நேர்மறையான சிந்தனையும், உற்சாகமான ஆற்றலும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.

அவருக்கு தொடர்ந்து வலிமை, ஞானம் மற்றும் நல்ல உடல்நலம் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மக்களுக்கு சேவை செய்வதிலும், சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை உருவாக்குவதிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த பிரபஞ்சம் அவருக்கு அளவற்ற நேர்மறை ஆற்றலையும் சக்தியையும் வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading