சந்தீப் கிஷன் நடிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரும்ஃ நடிகருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாக உள்ளது.சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘சிக்மா’ திரைப்படம் குறித்து பேசிய சந்தீப் கிஷன், விஜயை முதன்முதலாக சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். ‘லியோ’ திரைப்படத்தின் துவக்க விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னை விஜயிடம் அறிமுகப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
“விஜய் சார் மிகவும் எளிமையாகவும் பணிவாகவும் நடந்துகொண்டார். நான் நடித்த படங்களைப் பற்றி பேசினார். குறிப்பாக ‘மாநகரம்’ படத்தில் நான் பேசிய வசனத்தையே நினைவில் வைத்திருந்து குறிப்பிட்டார். மேலும், அவரது மகன் சஞ்சய்க்கு என்னுடைய படங்கள் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்” என்று சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜேசன் சஞ்சய் என்னை சந்தித்தபோதும், நான் நடித்த பல படங்களைப் பற்றி பேசினார். பெரிய சினிமா பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற தெளிவுடன் அவர் உழைக்கிறார். அதுவே அவருடன் இணைந்து பணியாற்ற என்னை ஊக்கப்படுத்தியது என்று கூறியுள்ளார். ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் அவரது முதல் படமாக உருவாகும் ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
