பாடகி கெனிஷா சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வரும் நபர்களில் ஒருவராக உள்ளார். நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழியாக இருந்து வந்த அவர், ரவி மோகனின் திரைப்பட நிறுவனம் தொடர்பான பணிகளையும் கவனித்து வந்ததாக கூறப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக கெனிஷா சென்னை நகரத்தை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் தனது பேட்டியில் இருவரும் பிரிந்துவிட்டதாக உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், மலையாளத் திரைப்பட உலகில் உருவாகி வரும் ‘மட்பிஷ்’ என்ற திரைப்படத்தின் மூலம் கெனிஷா பாடகியாக அறிமுகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஜிதின் ஐசக் தாமஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சன்னி வேய்ன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை கெனிஷா பாடியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
