ஹிந்தி திரையுலகில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘தி இந்தியா ஸ்டோரி’ மற்றும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இதில் ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், விரைவில் டீசர் வெளியாக உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் ஆபத்துகளை மையமாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சேட்டன் டி.கே இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் நடித்துள்ள ‘இந்தியன் 3’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் நிலுவையில் இருக்கும் நிலையில், ஹிந்தியில் அவர் நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
—
