அஜித்குமார் ஆவணப் படமான ‘கிளாடியேட்டர்ஸ்’‌ ரிலீஸ் தேதியில் மாற்றமா?

நடிகர் அஜித்குமார் தற்போது சினிமாவிலும், கார் ரேசிங்கிலும் மாறி மாறி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக கடந்த சில மாதங்களாக திரைப்படங்களை விட ரேசிங் துறையிலேயே அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். சர்வதேச அளவிலான பல்வேறு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு தனது நீண்டநாள் கனவான ரேசிங் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

அஜித்குமாரின் இந்த நீண்டகால ரேசிங் அனுபவத்தையும், அதில் அவர் சந்தித்த சவால்கள் மற்றும் சாதனைகளையும் மையமாகக் கொண்டு ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். மேலும், அஜித்குமார் ரேசிங் சர்வீஸ் நிறுவனத்தின் மூலம் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

முதலில் இந்த ஆவணப்படத்தை, அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில தொழில்நுட்ப மற்றும் வெளியீட்டு காரணங்களால் படம் தாமதமானதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஆவணப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ஆவணப்படத்தின் முதல் பிரதியை சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் வகையில் தயார் செய்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading