துருவ் விக்ரம்-க்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை ஜான்வி கபூர்?

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் தனது இடத்தை வலுப்படுத்தும் முயற்சியிலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ஜான்வி கபூர் தமிழில் எப்போது அறிமுகமாகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் சில முக்கிய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் அவரை தமிழில் அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்பட்டாலும், அந்த திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில், நடிகர் துருவ் விக்ரம் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை குறும்பட இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கவுள்ளார். மேலும், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading