ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா நடித்துள்ள மலையாளப் படம் ‘திரிஷ்யம் 3’ மே 21ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது முன்பதிவின் மூலமாக மட்டும் சுமார் 20 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டு நாட்களில் இது இன்னும் அதிகமாகலாம் என்கிறார்கள். இப்படியே போனால் முதல் நாள் வசூலாக மட்டும் சுமார் 30 கோடி வசூலிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
Add a Comment
