சாதனை படைத்த யூத் படத்தின் ‘முட்ட கலக்கி’ பாடல்!

2026ம் ஆண்டைப் பொறுத்தவரையில் மியூசிக்கலாக ஒரு சில பாடல்கள் மட்டுமே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவற்றில் தற்போது முதலாவது இடத்தில் ‘யூத்’ படத்தில் இடம் பெற்ற ‘முட்ட கலக்கி’ பாடல் அமைந்துள்ளது. அப்பாடல் தற்போது யு டியூப் தளத்தில் 175 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கென் கருணாஸ் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை எழுதி, பாடியுள்ளதும் கென் கருணாஸ் தான். ஜிவி பிரகாஷ்குமார் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடல் வெளியான மூன்று மாதங்களிலேயே இந்த சாதனையைப் படைத்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading