இந்தியத் திரையுலகத்தில் இதுவரையில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோக்களில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற வீடியோவாக ‘டிராகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ புதிய சாதனை படைத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த வீடியோவிற்கு 36.7 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. அனைத்து மொழிகளையும் சேர்த்து 64 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.இதுவரையில் 36 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் இருந்த ‘டாக்சிக்’ வீடியோவை அது முறியடித்துள்ளது. 3ம் இடத்தில் ‘பெத்தி’, 4ம் இடத்தில் ‘வேர் இஸ் புஷ்பா’, 5ம் இடத்தில் ‘தேவரா’, 6ம் இடத்தில் ‘ஜனநாயகன் பர்ஸ்ட் ரோர்’ ஆகியவை உள்ளன.
Add a Comment
