சமீபத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான தாய் கிழவி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது நடிப்புத் திறனை மீண்டும் நிரூபித்துள்ள ராதிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அறம், மனுஷி படங்களின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் காலனி என்ற படத்தில் ராதிகா நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் ராதிகா பங்கேற்கவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகா நடிகை முதல் சீசனைத் தொடரந்து, மகா நடிகை இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இளம் பெண்கள் இதில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிக்காட்டவுள்ளனர். இவர்களை மதிப்பீடு செய்து மெருகூட்டும் பொருப்பை ராதிகா சரத்குமார் ஏற்றுள்ளார். இதனால் இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Add a Comment
