இயக்குனர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ள திரைப்படம் ‘பிளாஸ்ட்’. ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கைன் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதிரடி கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ‘பிளாஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வரும் மே 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
