“நான் ஒரு பிடிவாதக்காரி” – மிருணாள் தாக்கூர் ஓபன் டாக்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாக்கூர், தற்போது தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழ் சினிமாவிலும் அவர் அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது குணாதிசயங்கள் குறித்து அவர் பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

தன்னிடம் தனக்கே மிகவும் பிடித்த குணம் எது என்ற கேள்விக்கு பதிலளித்த மிருணாள் தாக்கூர், “நினைத்ததை செய்து முடிப்பதில் நான் மிகவும் உறுதியானவள். ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், எப்படியாவது அதைச் சாதித்து காட்டிவிடுவேன். அதனால் என்னை ஒரு பிடிவாதக்காரி என்று சொல்லலாம். என்னுடன் நெருக்கமாகப் பழகுபவர்களுக்கு இந்த குணம் நன்றாகத் தெரியும்,” என்றார்.

அதேபோல், தனது பலவீனம் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். “யாராவது என்னை ஏமாற்றினாலும், அதை உடனடியாக கண்டுபிடிக்கும் அளவுக்கு நான் எச்சரிக்கையாக இருப்பதில்லை. மற்றவர்களை மிகவும் எளிதாக மன்னித்துவிடுகிறேன். அந்த இளகிய மனதுதான் என்னிடம் எனக்குப் பிடிக்காத விஷயம்,” என்று மிருணாள் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading