தெலுங்கில் இயக்குநர் வேணு எல்டன்டி இயக்கும் புதிய திரைப்படம் ‘யெல்லம்மா’. கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிகர்கள் நானி மற்றும் நிதின் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களால் அவர்கள் இருவரும் இந்தத் திட்டத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன்பு இப்படத்தில் சாய் பல்லவி அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகியோரில் ஒருவர் கதாநாயகியாக நடிக்கலாம் என தகவல்கள் பரவின. ஆனால் தற்போது ‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர் இந்தப் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
