சல்மான்கான் – நயன்தாரா நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கும் பகத் பாசில்? வெளியான புது அப்டேட்!

நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி பைடிபள்ளி, தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்துவருகிறார். தற்போது ‘எஸ்பிசி 63’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மும்பையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் சல்மான் கானும், நடிகை நயன்தாராவும் கலந்து கொண்டு முக்கிய காட்சிகளில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிaல், இப்படத்தில் சல்மான் கானுக்கு எதிராக மோதும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பஹத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு திட்டமிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading