பாலிவுட்டில் ‘நாக்ஸில்லா’ படத்துடன் அறிமுகமாகும் நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

நடிகை ப்ரீத்தி முகுந்தன் 2024ஆம் ஆண்டு வெளியான ‘ஓம் பீம் புஷ்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் கவினுடன் இணைந்து நடித்த ‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். மேலும், சாய் அபயங்கர் இசையில் வெளியான வைரல் பாடலான ‘ஆசை கூட’ மற்றும் டீஜே அருணாசலத்தின் ‘முட்டு முட்டு 2’ போன்ற இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விஷ்ணு மஞ்சு நடித்த ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் நடித்து கூடுதல் கவனம் பெற்றார்.

தற்போது ஹரிஷ் கல்யாணுடன் ‘தாஷமக்கான்’ மற்றும் அர்ஜுனுடன் ‘ப்ளாஸ்ட்’ திரைப்படங்களில் நடித்ததை முடித்துள்ள அவர், அடுத்த கட்டமாக பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். கார்த்திக் ஆர்யனுடன் ‘நாக்ஸில்லா’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் அமானுஷ்ய நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வருகிறது. ம்ரிக்தீப் சிங் லம்பா இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் வெளியீடு தாமதமாகியுள்ளது. தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்புகளை மையமாகக் கொண்ட கதை என்பதால், அதற்கான பெரும் அளவிலான கணினி காட்சிகள் சரியாக அமையாத காரணத்தால், அந்தப் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதுவே வெளியீட்டு தாமதத்திற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading