தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாகத் திகழும் சாய் பல்லவி, பாலிவுட்டில் அறிமுகமான ‘ஏக் தின்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் பாக்ஸ் ஆபீஸில் குறைந்த அளவில் மட்டுமே வசூல் செய்துள்ளது.
அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த மாதம் 1ஆம் தேதி வெளியான இப்படம், முதல் வார இறுதியில் இந்தியா முழுவதும் சுமார் ரூ. 3.25 கோடி வரையிலேயே வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமீர்கான் போன்ற முன்னணி நடிகர் நேரடியாக படத்தின் விளம்பரத்தில் ஈடுபட்டிருந்தபோதிலும், இந்தி ரசிகர்களிடையே இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தயாரித்து வரும் அமீர்கான் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பார்ப்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவு எனக் கருதப்படுகிறது.
தென்னிந்தியாவில் ‘பிரேமம்’, ‘பிடா’, ‘கர்கி’, ‘அமரன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் பெரிய ரசிகர் வட்டாரத்தை பெற்றுள்ள சாய் பல்லவிக்கு, இந்தி திரைப்பட உலகில் இந்த தொடக்கம் ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளது. ‘ஏக் தின்’ திரைப்படத்தின் குறைந்த வரவேற்பு காரணமாக, அவர் அடுத்ததாக நடிக்க உள்ள பெரிய பாலிவுட் திட்டமான ‘ராமாயணம்’ திரைப்படத்தின் மீது தற்போது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவிக்கு இந்த படம் வெற்றியைத் தருமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படம் தீபாவளி வெளியீடாக வர உள்ளது.
