வெப் தொடர் இயக்குநரான ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்ட பின்னர், நடிகை சமந்தா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’. நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், சமந்தா கதையின் மையப் பாத்திரமாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், இப்படம் குறித்து ராஜ் நிடிமொரு பேசியபோது, “மா இண்டி பங்காரம் திரைப்படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள், சமந்தாவின் அதிரடியான மற்றும் கடினமான பக்கத்தை வெளிப்படுத்தும். இந்த படத்தில் அவர் தனது எல்லைகளைத் தாண்டி, மிகவும் இயல்பான மற்றும் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் முழுமையாகத் தயாராகி, தனது உடலை கடுமையாக உழைத்து பல சாகச காட்சிகளில் துணிச்சலுடன் நடித்துள்ளார். இது சமந்தாவுக்கு திரையுலகில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் வகையில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் மே 15ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அந்த வெளியீட்டு தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
—
