நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் திரைக்கதைக்கு விருது!

கலாமயா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வி. கிதேஷ் தயாரித்து வரும் திரைப்படம் ‘என்ன விலை’ ஆகும். இந்த படத்தை சஜீவ் பழூர் இயக்கியுள்ளார். இதில் நிமிஷா சஜயன், கருணாஸ், ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நிமிஷா சஜயன் மற்றும் கருணாஸ் குடும்பத்திற்கு சட்ட ரீதியான வெற்றியை பெற்றுத்தரும் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ராமேஸ்வரம், சென்னை, புதுச்சேரி, கொச்சி உள்ளிட்ட மொத்தம் 56 இடங்களில் பல கட்டங்களாக படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திரைப்படம் தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றுள்ளது.

இதுகுறித்து சஜீவ் பழூர் கூறியதாவது: “ஆழமான மற்றும் யதார்த்தமான பின்னணியில் இருந்து உருவான கதைதான் ‘என்ன விலை’. இந்த திரைக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. விருதைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்லாமல், பார்வையாளர்களுக்கு தீவிரமான மற்றும் ஆழமான அனுபவத்தை அளிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்கும்போது அதன் உணர்வுகளை ரசிகர்கள் முழுமையாக உணர்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading