Advertisement

விறுவிறுப்பான ‘டிரெயின்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிரெயின்’. இதில் ஸ்ருதிஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், யூகி சேது, நரேன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு மிஷ்கினே இசையமைத்துள்ளார்.

ஒரே இரவில் ரயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு டார்க் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகியுள்ள இதன் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காகக் காத்திருந்த இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மர்மமும் பதற்றமும் நிறைந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் டிசம்பர் 4-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply